ஸ்ரீ புத்த வருடம் 2570 தேசிய வெசாக் மகோற்சவம் மற்றும் வெசாக் வாரம் – 2026

2026 மே 27 முதல் ஜூன் 02 வரை நடைபெறும் 2570 ஆவது தேசிய வெசாக் மகோற்சவம் மற்றும் “வெசாக் வார” நிகழ்வுகளில் கலந்து கொள்ள அகில இலங்கை சாசனாரக்ஷக சபை அனைவரையும் அழைக்கின்றது. இம்முறை தேசிய வெசாக் உற்சவத்தின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு மாத்தறை, திஹகொட, மிதெல்லவல புராண விகாரையில் நடைபெறும்.

தொனிப்பொருள்: ‘அபித்தரேத கல்யாணே’ (பொது நன்மைக் கருதி விரைந்து ஒன்றிணைவோம்)

வெசாக் வார வேலைத்திட்டங்கள்:

  • மே 27: தேசிய வெசாக் உற்சவம் மற்றும் அங்குரார்ப்பண நிகழ்வுகள்.

  • மே 28: “ஆரோக்கியமான வாழ்க்கை” – இலவச மருத்துவ முகாம்கள், இரத்த மற்றும் கண்தான நிகழ்வுகள்.

  • மே 29: நற்பண்பு மேம்பாடு – போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்கள், ஆலோசனை மற்றும் சிரமதானம்.

  • மே 30: வெசாக் பௌர்ணமி தினம் – சீல பாவனா மற்றும் ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்தல்.

  • மே 31: பௌத்த பிக்குகள் மற்றும் சில் மாதாக்களுக்கான திறன்விருத்தி பயிற்சி நிகழ்ச்சிகள்.

  • ஜூன் 01: ஆன்மீக மேம்பாடு – தர்ம போதனைகள், கலந்துரையாடல்கள் மற்றும் தியான நிகழ்வுகள்.

  • ஜூன் 02: ‘கிளீன் ஸ்ரீலங்கா’ – சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிரமதானம் மற்றும் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டங்கள்.

மும்மை கலந்த வெசாக் நன்நாளை பக்தியுடன் கொண்டாடுவதுடன், நற்பண்புள்ள சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்!

 

 

குறிப்பு ஆவணங்கள்

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன