புனித சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்தும் விழா
2330ஆம் ஆண்டு (2022) பொசன் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விஹாரையில் புனித நினைவுச்சின்னங்களின் கண்காட்சியை தேசிய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. கொழும்பு 07, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வளாகத்தில் 10.06.2022 அன்று புனித நினைவுச்சின்னங்களுக்கு புனித அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும ஆகியோரும் கலந்துகொண்டனர்.
காலை 8.00 மணியளவில் கொழும்பு 02, கங்காராம விகாரையிலுள்ள பெய்ரா ஏரியின் எல்லைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பேராசிரியர் இந்துரகரே தம்மரதன தேரர், ஹுனுபிட்டிய கங்காரமதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் விசேட பூஜை வழிபாடுகளை நடத்தினர்.
