font sinhalagovlkfont tamil

கோவிலுடைமை பிரிவு

1931 இன் 19 ஆம் இலக்கமுடைய கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தினால் பௌத்த அலுவல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை ஈடேற்றுதல் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கிணங்க இப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான பணிகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

  1. கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தின் 4(1) பிரிவின்படி பௌத்த அலுவல்கள் ஆணையாளரது கட்டுப்பாட்டின் கீழ் நிலவுகின்ற விஹாரை கோயில்களுக்கு பஸ்நாயக்க நிலமேக்கள் / அறங்காவலர்களை நியமித்தல்.
  2. பௌத்த வழிபாட்டுத் தலங்களின் ஆதனங்களின் நிருவாகத்திற்கு அவசியமான ஒத்துழைப்பினை வழங்குதல். இங்கு வழிபாட்டுத் தலங்களின் காணிகளைக் குத்தகைக்கு விடலுக்கான அனுமதி வழங்குதல், வழிபாட்டுத் தலங்களின் ஆதன நிருவாகத்திற்கும் பாதுகாப்பிற்கும் அவசியமான ஒத்துழைப்பினை வழங்குதல், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணிகளில் தோன்றுகின்ற பிணக்குகளை தீர்த்துவைப்பதில் இடையீடு செய்தல், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணிகளில் இரத்தினக்கல் அகழ்வுக்கான உரிமங்களை வழங்குதல், மறைந்த பிக்குமார்களின் ஆதனங்களில் தோன்றும் பிணங்குகளைத் தீர்த்துவைத்தல், விஹாரைகளுக்கான காணிக்கை உறுதிகளை விநியோகிப்பதற்கான அனுமதி வழங்குதல், அரசாங்கம் கையேற்ற விஹாரைகளுக்குச் சொந்தமான ஆதனங்களுக்காக வைப்புச் செய்துள்ள இழப்பீட்டுத் தொகைகளை விடுவிப்பதற்கான விதப்புரை வழங்குதல்.
  3. நாட்டின் அனைத்து விஹாரைகளையும் பௌத்த அலவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்தலும் விகாராதிபதி பதவிகளை ஏற்றுக்கொள்ளலும்.
  4. இரத்தினபுரி மற்றும் கண்டி பிராந்திய பௌத்த அலுவல்கள் அலுவலகங்களுடன் இணைப்பாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

பிராந்திய அலுவலகங்கள் இரத்தினபுரி பிராந்திய அலுவலகம் மூலமாக இரத்தினபுரி, பதுளை மற்றும் மொனறாகல மாவட்டங்களுடன் தொடர்புடையதாக இப்பிரிவினால் ஈடேற்றப்பட வேண்டிய கருமங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. (விஹாரை நிலையங்களை பதிவுசெய்தலைத் தவிர)

  1. விஹாரை நிலையங்களுக்குச் சொந்தமான காணிகளை குத்தகைக்குவிடல்.
  2. இரத்தினக்கல் அகழ்வு உரிமங்களைப் புதுப்பித்தல்.
  3. புதிய இரத்தினக்கல் உரிமங்களை விநியோகித்தல்.
  4. கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தின் 4(1) பிரிவினால் நிருவகிக்கப்படுகின்ற விஹாரைகளுக்கான அறங்காவலர்களை நியமித்தல்.

கண்டி பிராந்திய அலுவலகம் மூலமாக கண்டி, மாத்தளை, நுவரேலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள விஹாரைகள் கோயில்களும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கன மற்றும் முதியங்கன ரஜமஹா விஹாரைகளும் மஹியங்கன சமன் தேவாலயமும் நிருவகிக்கப்படுகின்றன.

இந்த அலவலகம் மூலமாக 1931 இன் 19 ஆம் இலக்கமுடைய கோயிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகள் அமுலாக்கப்படுகின்றன. அதற்கிணங்க நிருவகிக்கப்படுகின்ற விஹாரை நிலையங்களுக்காக அறங்காவலர்களை நியமித்தல், பிணைப்பபணத்தை வரைவழைத்துக்கொள்ளல் மற்றும் விடுவித்தல், விஹாரை நிலையங்;களுக்குச் சொந்தமான ஆதனங்களைப் புதிய அறங்காவலர்களிடம் ஒப்படைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களில் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற உபசம்பத்தா (உயர்தீட்சை) வைபவம், எசெல (ஆடி) பெரஹெர மற்றும் பிற மத வைபவப் பணிகளில் பங்கேற்பதுடன், விசேடமாக அறநெறிப் பாடசாலை பரிசளிப்பு விழா போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலப்பகுதியைப் போலறன்றி வழிபாட்டுத் தலமொன்றுக்குச் சொந்தமான காணிகளைக் குத்தகைக்கு எடுப்பதற்கான விசேட போக்குகள் நிலவுகின்றன. நகர்சார் பிரதேசங்களில் அமைந்துள்ள காணிகளை குத்தகைக்கு எடுத்தல் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாடசாலைகளுக்கு பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பொது வசதிகள் காரணமாக மக்கள் நகர்புறங்களை நாடித் திரண்டு வருகின்றனர். எனவே காணிகளைக் குத்தகைக்கு விடல் முன்னரைவிடத் தற்போது சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது. குறிப்பாக விஹாரை நிலையங்களின் உரிமை உறுதிப்படுத்தத்தக்க வகையில் ஒவ்வொரு காணிக்குமான ஆரம்பத் திட்டவரைபடங்கள் தயாரிக்கப்படுவதோடு குத்தகைப் பணம் தொடர்பில் பிரதேச செயலாளர்களிடமிருந்து மதிப்பீடு அறிக்கைகள் கோரப்பட்டு குத்தகைப் பணத்தை தீர்மானிக்கலாம். ஒருசில காணிகளுக்கான வெளிக்கள விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் அலுவலகங்களுடன் தொடர்புடையவர்களை  வரவழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல் ஆகிய கடமைகள் ஈடேற்றப்படுகின்றன.

கண்டி பிராந்திய பௌத்த அலுவல்கள் அலுவலகம் கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் தொடர்புடைய கண்டி, நுவரேலியா, பதுளை மாவட்டங்களின் பணிகளை ஈடேற்றுகின்றது.

  1. பஸ்நாயக்க நிலமேமார்களை நியமித்தல்.
  2. வழிபாட்டுத் தலங்களின் அறங்காவலர்களை நியமித்தல்.
  3. குத்தகை விண்ணப்பப் பத்திரங்களை விநியோகித்தல்.
  4. மதிப்பீட்டு அறிக்கைகளை வரவழைத்துக்கொள்ளல்.
  5. வழிபாட்டுத் தலங்களின் பண்டங்களைப் பொறுப்பேற்றல்.
  6. வழிபாட்டுத் தலங்களுக்காக பணத்தை விடுவித்தல்.
  7. ஒவ்வொரு வருடமும் வெளிக்களப் பரிசீலனையை மேற்கொள்ளல்.
  8. ஒவ்வொரு வருடமும் அலுவலக பரிசோதிப்புக்களை மேற்கொள்ளல்.
  9. விகாராதிபதிகளை உறுதி செய்தல்.
  10. மரங்களைத் தறிப்பதற்கான அனுமதி வழங்கல்.
  11. வழிபாட்டுத் தலங்களின் காணிக்கைப் பணத்தை அப்புறப்படுத்ததலும் சம்பந்தப்பட்ட கடமைப் பணிகளை ஈடேற்றுதலும்.

இரத்தினபுரி பிராந்திய பௌத்த அலுவல்கள் அலுவலகம்.  இரத்தினபுரி பிராந்திய பௌத்த அலுவல்கள் அலுவலகம் பிரதானமாக இரத்தினபுரி, பதுளை, மொனறாகல மாவட்டங்களைச் சேர்ந்த பௌத்த வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பணிகளை கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக ஈடேற்றி வருகின்றது.

இந்த அலுவலகத்தினால் ஈடேற்றப்படுகின்ற பிரதான பணிகள் பின்வருமாறு:

  1. அறங்காவலர்களை நியமித்தல்.
  2. காணிகளைக் குத்தகைக்கு விடல்.
  3. குத்தகைக் கட்டணங்களைத் திருத்தி அமைத்தல்.
  4. வெட்டுமரங்களைத் தறித்தலும் போக்குவரத்துக்கான அனுமதிச்சீட்டுகளை விநியோகித்தலும்.
  5. மறைந்த பிக்குமார்களுக்குச் சொந்தமான வங்கிப் பணத்தை விடுவித்தல்.
  6. புண்ணிய உறுதிகளை வழங்கும் பொருட்டு அனுமதி வழங்குதல்.
  7. இழப்பீட்டுத் தொகை வட்டியை விடுவித்தல்.
  8. விஹாரை நிலையங்கள் தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்துவைத்தல்.
  9. விஹாரை நிலையங்களைப் பதிவு செய்யும் பொருட்டு மஹாநாயக்க தேரருக்கு கடிதங்கள் அனுப்பிவைத்தல்.
  10. இரத்தினக்கல் அகழ்வுக்கான  உரிமங்களை வழங்க விதப்புரை செய்தல்.
  11. இரத்தினக்கல் அகழ்வு உரிமங்களை நீடிக்க விதப்புரை செய்தல்.