font sinhalagovlkfont tamil

தகவல் பிரிவு

  1. இத்திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற தஹம் சரண செய்திமடலை விநியோகித்தல். இந்த செய்திமடலின் அச்சிடல் பணிகள் தொடர்பிலான சகலவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
  2. தஹம் சரண செய்திமடல் விநியோகப் பணிகள்.
  3. புத்தசாசன, சமய அலுவல்கள் அமைச்சினதும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினதும் தகவல்களை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல்.

"தஹம் சரசவிய" கருத்திட்டம்:

இக்கருத்திட்டம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. உயர் கல்வி பயின்றிடாத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு அறிவினை வழங்குதல் மற்றும் உயர் கல்வியின்பால் ஆற்றுப்படுத்துவதன் மூலமாக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை அப்பணியில் ஈடுபட்டுள்ள திறன் படைத்தவர்களாக மாற்றுவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

2006 ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து அமுலாக்கப்படுகின்ற இப்பாடநெறி 2008 ஆம் ஆண்டில் இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகத்துடன் கூட்டாக அமுலாக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து இப்பாடநெறி அமுலாக்கப்பட்டுள்ளதோடு, 2010 ஆம் ஆண்டுக்காக மீண்டும் பௌத்த, பாளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Dhamma University:

This project is implemented in collaboration with the University of Sri Jayawardhanapura. Even though any person who does not have necessary higher qualification , purely by being a Dhamma School teacher, one can follow this Diploma course.

31 project workshop are conducted in 18 districts. In these workshops 3396 students studies and sat the examination. Results of the examination are pending. The University has recruited 145 lecturers after examining the qualifications This course is conducted annually.

பாளி மொழிச் செயலமர்வு:

பாளி மொழியறிவினை பிரபல்யப்படுத்துவதையும் பாளியைக் கற்பிக்கும் அசிரியர்களுக்காக பாளி மொழியைக் கற்பிப்பதை குறிக்கோளாகக் கொண்டும் இது தொடங்கப்பட்டுள்ளது.

தீவின் 17 மாவட்டங்களில் 31 நிலையங்களில் நடத்தப்பட்டது. வயது வேறுபாடின்றி மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதோடு 6 மாத பாடநெறிக் காலப்பகுதிககுப் பின்னர் பரீட்சை நடத்தப்பட்டு பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும். வருடந்தோறும் நடத்தப்படுகின்ற பாடநெறியாகும்

"தஹம் சரண" செய்திமடல் அச்சிடல்:

2007 மே மாதத்தில் இருந்து தஹம் சரண செய்திமடலின் 09 இதழ்கள் 127000 பிரதிகளை கொண்டதாக அச்சிடப்பட்டது. செய்திமடலை அச்சிடுவதன் மூலமாக பொருளாதார நன்மைகளைப் பெற இயலாதென்பதோடு அச்சிடல் செலவினை தீர்க்குமுகமாக பிரதியொன்று ரூ. 10/- விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பிற நன்மைகள் மத்தியில் புத்த சாசன, சமய அலவல்கள் அமைச்சினதும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினதும் தகவல்களை அறநெறிப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல். அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களினதும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினதும் பல்வேறு கருத்திட்டங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களினதும் எழுத்தாற்றலை விருத்தி செய்வதும், அறிவினை விருத்தி செய்வதையும் என்பவற்றைக் குறிப்பிடலாம்.