font sinhalagovlkfont tamil

திணைக்களத்தின் பின்னணி

பௌத்த  அலுவல்கள் திணைக்களம் பிரதானமாக பௌத்த சாசனத்தின் நீடுறுதிநிலைக்காகவும் தர்மத்தை மதிக்கும் பௌத்த சமூகமொன்றை பேணி வருவதற்கும் ஏற்புடையதாகின்ற பல்வேறு நடப்புக் கருத்திட்டங்களை ஈடேற்றி வருவதோடு 1931 இன் 19 ஆம் இலக்கமுடைய கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டம் மூலமாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்திடம் அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை பௌத்த வழிபாட்டுத் தலங்களையும் ஆதனங்களையும் பௌத்த சாசனத்தின்; மேம்பாட்டுக்காகவே ஈடுபடுத்த அவசியமான நிருவாக ரீதியான ஒத்துழைப்பினை வழங்குதல், விஹாரை நிலையங்களை அபிவிருத்தி செய்தல், அறநெறிப் பாடசாலைக் கல்வியை விருத்தி செய்தல் மற்றும் நாட்டின் அனைத்து சாமனேர (சீடர்) / உபசம்பதா (உயர்தீட்சை) பிக்குமார்களைப் பதிவு செய்து பதிவு இடாப்பினை பேணிவருதல் ஆகியவற்றையும் ஈடேற்றி வருகின்றது.

இப்பணிகளை வெற்றிகரமாக ஈடேற்ற பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் கீழே காட்டப்பட்ட பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

  1. நிருவாகப் பிரிவு
  2. கணக்குப் பிரிவு
  3. கோவிலுடைமைகள் பிரிவு
  4. அபிவிருத்திப் பிரிவு
  5. அறநெறிப் பாடசாலைகள் பிரிவு
  6. கருத்திட்டப் பிரிவு
  7. பிக்குமார் பதிவுப் பிரிவு
  8. தகவல் பிரிவு

கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்துடன் தொடர்புடைய அலுவல்களை தொலைதூரத்தில் உள்ள வழிபாட்டு நிலைய வாசிகளான பிக்குமார்களுக்கு ஈடேற்றப்படுவதை வசதிப்படுத்துவதற்காக கண்டி பிராந்திய அலுவலகமும் இரத்தினபுரி பிராந்திய அலுவலகமும் நிறுவப்பட்டு பேணிவரப்படுகின்றது. பௌத்த சாசனத்தின் நீடுறுதிநிலை, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பிரதானமாக கீழே காட்டப்பட்டுள்ள கருத்திட்டங்களும் நிகழ்ச்சித்திட்டங்களும் திணைக்களத்தினால் பேணி வரப்படுகின்றன.

  1. சாசனப் பாதுகாப்புச் சபைகளைப் பேணிவருதலும் அமுலாக்கலும்.
  2. அறநெறிப் பாடசாலை அலுவல்கள் :
    1. அறநெறிப் பாடசாலை நூல்களை அச்சிட்டு விநியோகித்தல்.
    2. நாடளாவிய ரீதியில் அறநெறிப் பாடசாலைத் தரங்களின் பரீட்சையை நடத்துதல்.
    3. அறநெறிப் பாடசாலை மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்கான நிகழ்ச்சிகளை பிரதேச, மாவட்ட மற்றும் அகில இலங்கை ரீதியாக நடத்துதல்.
    4. அறநெறிப் பாடசாலை அசிரியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான  அறநெறி ஆசிரியர் தராதரப் பத்திர பரீட்சையை நடத்துதல்.
    5. அறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கான சீருடைகளை வழங்குதல்.
    6. அறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகித்தல்.
    7. அறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கான பயிற்சி செயலமர்வுகளை நடத்துதல்.
    8. அறநெறிப் பாடசாலை கட்டிடங்களுக்கான உதவிகளை வழங்குதல்.
    9. கஸ்ரப் பிரதேச அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்களை வழங்குதல்.
    10. இடையறாமல் நீண்ட காலமாக  சேவையில் ஈடுபட்டுள்ள அறநெறிப் பாடசாலை அசிரியர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்குதல்.
    11. அறநெறிப் பாடசாலை அசிரியர்களின் பாளி மொழி அறிவினை விருத்தி செய்யும் பொருட்டு பாளி மொழி மேம்பாட்டு வகுப்புக்களை நடாத்தி பரீட்சையை நடாத்துதல்.
    12. குறைந்த கல்வி மட்டத்தில் உள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு உயர்வான அறநெறிக் கல்வியை வழங்க ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்துடனும் பௌத்த, பாளி பல்கலைக்கழகத்துடனும் ஒருங்கிணைந்து தஹம் சரசவிய நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்கல்.
    13. அறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கான நூல்நிலையக் கொடுப்பனவினை வழங்குதல்.
  3. நிறுவனத்தின் நோக்கத்தை அடையும் பொருட்டு இணைப்பாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடனான பணிகள், தாபனப் பணிகள், கட்டிடப் பராமரிப்பு, தபால் தொடர்பான கடமைகள், வாகனங்களுடன் தொடர்புடைய கடமைப் பணிகளை ஈடேற்றுதல்.
  4. நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தி செலவுத் தலைப்புகளுக்காக வழங்கப்படுகின்ற செலவுகளைச் செய்தல், தபால் தொடர்பான கணக்குகளைப் பேணுதல், சம்பளம் செலுத்துதல் போன்ற நிதி மற்றும் கணக்குச் செயற்பாடுகளை ஈடேற்றுதல்.
  5. கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தின் 4(1) பிரிவின்படி பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தின் கட்டுப்பாடு நிலவுகின்ற பௌத்த வழிபாட்டுத்தலங்களுக்கான பஸ்நாயக்க நிலமே / அறங்காவலர்களை நியமித்தலும் அவர்களின் நிருவாக நடவடிக்கைகளை முறைப்பாடு செய்தலும்.
  6. பௌத்த வழிபாட்டுத் தலங்களின் ஆதன நிருவாகத்திற்கு அவசியமான ஒத்துழைப்பினை வழங்குதல், இங்கு வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணிகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் அந்த வழிபாட்டுத் தலங்களுக்கு வருமானம் பெற்றுக்கொள்ள அவசியமான அங்கீகாரத்தை வழங்குதல், பிக்குமார்களுக்குச் சொந்தமான அசைவற்ற ஆதனங்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான ஆதனங்களில் நிலவும் பிணக்குகளைத் தீர்த்துவைப்பதில் இடையீடு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளல்.
  7. தீவின் விஹாரை நிலையங்கள் அனைத்தையும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்தல், விஹாராதிபதி பதவிகளை ஏற்றங்கீகரித்தல்.
  8. விஹாரை நிலையங்களுக்கான உதவிகள், நான்வகை காணிக்கைப் பொருள் உதவிகள், பொருளாதார வசதியீனம் நிலவுகின்ற விஹாரை நிலையங்களுக்கான உதவிகளை வழங்குதல்.
  9. பிரதேச சாசனப் பாதுகாப்பு சபைகளை நிறுவும் பணிகள்.
  10. பிக்குமார்களின் தகனக் கிரிகைகளுக்கான உதவிகளை வழங்குதல்.
  11. சுதந்திர தினம், வெசாக் தினம், பொசொன் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
  12. விஹாரை நிலைய செயலணிச் சங்கங்கள், தர்மகர்த்தா சபைகள், ஆசிரம சபைகளை பதிவுசெய்தல்.
  13. விஹாரை நிலையங்களுக்கு சலுகைக் கட்டண அடிப்படையில் தொலைபேசி, நீர், மின்சாரம் போன்ற வசதிகளை வழங்குவதற்கு அவசியமான விதப்புரைகளை செய்தல்.
  14. மதப் பிரிவுகள் மற்றும் மதப் பிரிவுத் தரப்பினர் தொடர்பான பணிகள்.
  15. உயர்குலப் பிள்ளைகளை துறவறத்தில் சேர்த்தல் மற்றும் உபசம்பதா (உயர்தீட்சை) நடவடிக்கைகள்.
  16. மதப்பிரிவுத் தலைமையகத்திற்கான கொடுப்பனவுப் பணிகள். (சாரதிகள், தொழிலாளர்கள்).
  17. எழுத்துதவித் திட்டத்தின் கீழான நூல்களின் கொள்வனவுப் பணிகள்.
  18. தசசீல மாதாக்கள் தொடர்பான பணிகள்.
    1. ஆசிரமங்களைப் பதிவு செய்தல்.
    2. அடையாள அட்டைகளை விநியோகித்தல்.
    3. கல்வி நிறுவனங்களுடனான நடவடிக்கைகள்.
    4. கூட்ட நடவடிக்கைகளும் சங்கமித்தா பாராட்டு வைபவமும்.
  19. பிக்குமார்களின் சாமனேர (பிக்குச்சீடர்) பதிவு செய்தலும் உபசம்பதா (உயர் தீட்சை) பதிவு செய்தலும்.
  20. பௌத்த பிக்குமார்களுக்கான அடையாள அட்டைகளைத் தயாரித்தல்.
  21. விஹாரை நிலையங்களுக்கு சொந்தமான ஆதனங்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பான பணிகள்.