font sinhalagovlkfont tamil

எங்களை பற்றி

1931 இன் 19 ஆம் இலக்கமுடைய கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்திற்கு 1981 யூலை 02 ஆம் திகதி கொண்டுவரப்பட்ட விசேட திருத்தம் மூலமாக பௌத்த அலுவல்கள் ஆணையாளர் எனும் பதவியை உருவாக்கி பௌத்த அலுவல்கள் திணைக்களத்தை தாபித்து, அதுவரை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இருந்த பௌத்த அலவல்களும் அறநெறிப் பாடசாலை அலுவல்களும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின்

கீழ் இருந்த விஹாரை நிலையங்கள் தொடர்பான பணிகளும் பௌத்த அலுவல்கள் ஆணையாளரின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அதற்கு முன்னர் பௌத்த அலுவல்களும் அறநெறிப் பாடசாலைகளின் அலுவல்களும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பௌத்த அலுவல்கள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விஹாரை நிலையங்கள் தொடர்பான பணிகளை மேற்பார்வை செய்தலானது பொது நம்பிக்கைப் பொறுப்பாளரினால் தலைமை வகிக்கப்படுகின்ற பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தினாலேயே மேற்பார்வை செய்யப்பட்டது. பௌத்த அலுவல்கள் ஆணையாளர் பதவி 2004.01.01 ஆம் திகதியில் இருந்து பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் பதவிவரை பதவியுயர்த்தப்பட்டு பௌத்த அலுவல்கள் தொடர்பில் அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இதுவரை பௌத்த அலுவல்கள் ஆணையாளர்கள் 07 பேர்களும் பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் இருவரும் நியமனம் பெற்றதோடு தற்போது இரண்டாவது பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் அப்பதவியை வகிக்கின்றார்.